சமந்தாவுடன் நியூயார்க்…சோபிதாவுடன் எங்கே தெரியுமா…நாக சைதன்யா போட்ட அடுத்த பிளான்..!
Author: Selvan7 December 2024, 5:25 pm
சோபிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் நாக சைதன்யா!
நாக சைதன்யா -சோபிதா திருமணம் ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.இவர்களுடைய திருமண புகைப்படங்கள் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் இருவரும் ஹனிமூனுக்கு எங்கே செல்ல போகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.ஏற்கனவே நாக சைதன்யா தன்னுடைய முதல் மனைவியான சமந்தாவை நியூயார்க் நகரத்துக்கு ஹனிமூன் அழைத்து சென்றார்.பின்பு இருவரும் விவாகரத்து வாங்கி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
இதையும் படியுங்க: கோபத்தின் உச்சியில் ஏ.ஆர்.ரகுமான் மகள்..ரசிகர்களை எச்சரித்து பதிவு வெளியீடு..!
தற்போது தன்னுடைய இரண்டாவது காதல் மனைவியான சோபிதாவை அவருக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து செல்கிறார்.ஏற்கனவே சோபிதா தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் தன்னுடைய வருங்கால கணவரை பற்றியும்,ஹனிமூன் இடத்தை பற்றியும் கூறியிருப்பார்.

அதில் என்னுடைய வருங்கால கணவர் என்னிடம் கனிவு காட்டும் நபராக இருக்க வேண்டும் என்றும்,ஹனிமூனுக்கு அவர்கூட ஐஸ்லாந்து செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக வெளிப்படுத்திருப்பார்.
இந்நிலையில் சோபிதா விருப்பப்பட்ட இடத்திற்கு தான் நாக சைதன்யா அழைத்துச் செல்வார்,விரைவில் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.