சமந்தா – நாகசைதன்யாவுக்கு மீண்டும் திருமணம் – பெற்றோர்களின் பாசப்பிணைப்பு!

Author: Rajesh
12 February 2024, 11:09 am

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha - updatenews360

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

naga chaitanya-updatenews360

விவாகரத்து ஆகி 3 வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட விலையில் சமந்தாவின் வீட்டில் மறுமணம் செய்துக்கொள்ள கூறி வருகிறார்களாம் அவரது பெற்றோர்கள். இதனால் சமந்தா விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் சமந்தாவை போலவே நடிகர் நாகசைதன்யாவுக்கு அவரது தந்தை நாகார்ஜூனா மறுமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தனது உறவுக்கார பெண் ஒருவரை பார்த்து வைத்துள்ளதாகவும் விரைவில் திருமண அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே கூடிய சீக்கிரத்தில் சமந்தா – நாகார்ஜூனா ஜோடிக்கு விரைவில் மறுமணம் நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!