தெலுங்கு திரையுலகில் நட்சத்திர ஸ்டார் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் 80ஸ் காலகட்டத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். அவர் நடிப்பு தொழிலை தவிர பல கோடி முதலீட்டில் சொந்தமாக பல பிசினஸ்களை செய்து வருகிறார்.
நடிகர் நாகார்ஜூனா:
தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரன் திரைப்படத்தில் நாகார்ஜூனா முக்கிய ரோலில் நடித்த வருகிறார். இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள தம்மிடி குந்தா என்ற ஏரியிலிருந்து சுமார் 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரம்மாண்ட கன்வென்ஷன் ஹால் ஒன்றை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தரைமட்டமான பிரமாண்ட மண்டபம்:
இதை அடுத்து பாஸ்கர் ரெட்டி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் அவர் மீது புகார் தெரிவித்ததன் பேரில் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரித்தனர். அப்போது இந்த கன்வென்ஷன் ஹால் இருக்கும் 6.69 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட சுமார் 3.30 ஏக்கர் வரை தம்பிடி குந்தா ஏரி நிலப்பரப்பை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது .
இதை அடுத்து இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அந்த பிரம்மாண்ட கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தரை மட்டம் ஆக்கி இருக்கிறார்கள். இந்த திருமண மண்டபத்தில் பிரபல நட்சத்திர நடிகர்களின் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் உள்ளிட்டவை. நடைபெற்று வந்த நிலையில் தற்போது இடித்து தரைமட்டம் ஆக்கியதன் மூலம் பல லட்சம் நாகார்ஜுனாவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமந்தா சாபம் சும்மா விடாது:
இதை அறிந்த ரசிகர்கள்…. சமந்தாவின் சாபம் உங்களை சும்மா விடுமா என்ன? என்று நாகார்ஜுனாவை திட்டி தீர்த்து விமர்சனம் செய்து வருகிறார்கள். நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.