புது மருமகளின் ஆசையை நிறைவேற்றிய நாகார்ஜூனா – சமந்தாவுக்கு கூட இப்படி பண்ணல!

Author:
24 August 2024, 10:09 am

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நாக சைதன்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகரான அக்கினேனி நாகார்ஜுனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தில் நடித்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமான இளம் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

samantha - updatenews360

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நான்கு ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்பட புகழ் நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக ரகசியமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இந்த காதல் திருமண விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து திருமண ஏற்பாடுகள் தற்போது தடுபுடலாக நடைபெற்று வருகிறதாம். இவர்களுக்கு திருமணம் முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடக்க ஏற்பாடுகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு தன்னுடைய திருமணம் ராஜஸ்தானில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் கொண்டிருந்தாராம். இதனால் மருமகளின் ஆசையை தெரிந்து கொண்ட நாகார்ஜுனா அதை நிறைவேற்றும் விதத்தில் ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டி நடைபெறவிருந்த திருமணத்தை கேன்சல் செய்துவிட்டு தற்போது ராஜஸ்தானில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் புது மருமகளுக்காக இப்படி பார்த்து பார்த்து செய்கிறாரே…. சமந்தாவுக்கு கூட இப்படி பண்ணியிருக்க மாட்டார் போலயே எனக் கூறி விமர்சித்து வருகிறார்கள்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 206

    0

    0