கேவலமான கண்டிஷன் போட்டு அமலாவை திருமணம் செய்த நாகர்ஜூனா.. இதெல்லாம் ஒரு காதலா?
Author: Udayachandran RadhaKrishnan11 November 2024, 6:55 pm
தெலுங்கில் முன்னணி நடிகராக வாரிசு நடிகராக உள்ளவர் நாகர்ஜூனா. இவர் நடிகை அமலாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அமலாவிடம் சத்தியம் வாங்கிய நாகர்ஜூன்
ஆனால் முதல் மனைவி இருக்கும் போதே அமலா மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்ததாக அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால் இதையெல்லாம் மறுத்த நாகர்ஜூனா, முதல் மனைவியுடன் விவாகரத்து ஆனபிறகு தான் அமலாவை காதலித்தேன் என கூறினார்.
இந்த நிலையில் அமலாவை திருமணம் செய்த போது நாகர்ஜூனா சில கண்டிஷன்களையும் போட்டு சத்தியம் வாங்கியுள்ளதாக பிரபல நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.
இது குறித்து குட்டி பத்மினி அவருடைய யூடியூப் சேனலில் கூறியுதாவது, அமலா என்னுடை தோழி. நாகர்ஜூனா திருமணத்தை ஏன் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார் என கேட்டதற்கு, அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது நிச்சயம் கைவிடமாட்டார் என அமலா கூறியுள்ளார்.
இதெல்லாம் காதலா?
ஒரு நாள், என்னை திருமணம் செய்ய அவர் ஓகே சொல்லிட்டாரு, ஆனா கண்டிஷன் போட்டிருக்காரு. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் நான் இப்படியே இருக்கணுமாம்.. குண்டு ஆகக் கூடாது என சத்தியம் வாங்கியிருக்காரு என அமலா கூறியதாக குட்டி பத்மினி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு காதலா? என கழுவி ஊற்றி வருகின்றனர்.