அவசர அவசரமா நடந்த நிச்சயதார்த்தம்…. இது தான் காரணம் அதிரவைத்த – நாகார்ஜூனா!

Author:
12 August 2024, 5:15 pm

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நாக சைதன்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகரான அக்கினேனி நாகார்ஜுனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தில் நடித்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமான இளம் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நான்கு ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்பட புகழ் நடிகை சோபிதா துலிபாலாவை இன்று திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக ரகசியமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nagarjuna-Akkineni-2

இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகார்ஜுனா தான் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு இவர் தான் புது மருமகள் என அறிவித்தார். இந்த நிலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நாகார்ஜூனா ஆகஸ்ட் 8ம் தேதி ரொம்ப நல்ல நாள் என்பதால் அவசரமாக நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்தோம்.

இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்ததால் உடனே நிச்சயதார்த்தத்தை நடத்தலாம் என நடத்திவிட்டோம். இன்னும் திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று நாகர்ஜுனா கூறியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 171

    0

    0