சமந்தாவுக்கு போட்ட அதே கண்டிஷன் : திருமணத்திற்கு பின் சோபிதா எடுத்த திடீர் முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2025, 6:10 pm

நடிகர் நாகசைதன்யா – நடிகை சமந்தா இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இது நீடிக்கவில்லை.

இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆனால் என்ன காரணம் என்று தெளிவாக இருவரும் கூறவில்லை.

இதையும் படியுங்க: விடாமுயற்சி FDFSக்கு கூட கூட்டம் வரல.. சரியப்போகும் அடுத்த மாபெரும் நினைவு!

இதையடுத்து சமந்தா ஒரு பக்கம் தனது கேரியரில் கவனம் செலுத்த, நாக சைதன்யாவோ நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரும் ஊர் ஊராக சுற்ற, இது வீட்டுக்கு தெரிந்ததும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டனர்.

திருமணம் செய்த கையோடு நாக சைதன்யா தனது படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் சோபிதா வழக்கம் போல தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

Sobhita take sudden decision

ஆனால் திருமணத்திற்கு பிறகு சோபிதாவின் தோற்றம், நடை, உடை என எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தாராளமாக கவர்ச்சி காட்டியிருந்த சோபிதா இனி அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று, நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.

Nagarjuna Conditioned Sobhitha takes Decision

மணமகன் வீட்டார் போட்ட கண்டிஷன் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும், இதே கண்டிஷனால்தான் சமந்தா விவாகரத்து வாங்கியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?