நாக சைதன்யா – சோபிதா திருமணத்தை நெட்பிளிக்சில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ள நிலையில் சமந்தாவை வெறுப்பேற்ற பக்கா பிளானை போட்டுள்ளார் நாகர்ஜூனா.
பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் வரவிருக்கும் திருமணம் குறித்து தனது யூடியூப் சேனலில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறும் பிரபலம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ!
அவரின் பேச்சில், “சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு சிக்கலில், நாகார்ஜுனாவின் குடும்பம் சமந்தாவுக்கு ரூ.100 கோடி அளவுக்கு ஜீவனாம்சமாக வழங்க முன்வந்தது. ஆனால், சமந்தா அந்த பணத்தை நிராகரித்து, சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். தற்போது, அவர் சிட்டாடல் வலைத் தொடர்களில் நடித்து புகழ்பெற்று வருகிறார்.
சமீபத்தில், வருண் தவானிடம் பேசியபோது, ‘என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தேவையில்லாத செலவு என்னுடைய முன்னாள் காதலருக்குக் கொடுத்த விலை உயர்ந்த பரிசு’ என கூறியது, நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிகமாக கோபப்படுத்தியுள்ளது,” என்று பாலு கூறியுள்ளார்.
மேலும், நாக சைதன்யாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக, ரூ.100 கோடி செலவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது சமந்தாவுக்கு எதிரான பதிலடி போல செயல்படுவதாகக் கூறியுள்ளார். இந்த திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டார்.
பல்வேறு பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க நெட்ஃப்ளிக்ஸ் கோரிக்கை வைத்ததாகவும், பாலிவுட், கோலிவுட் மற்றும் மல்லுவுட் என அனைத்து திரைத்துறையிலிருந்தும் பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.