எங்க பிரிவுக்கு காரணமே அவங்க தா… சமந்தாவை பற்றி முதன்முறையாக ஆத்திரத்தை கொட்டிய நாகசைதன்யா!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2023, 7:19 pm

நடிகர் நாக சைதன்யா தற்போது தனது கஸ்டடி படத்தின் புரமோஷன்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் படத்தின் ப்ரோமஷனுக்காக சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவி சமந்தாவுடன் எதற்காக விவாகரத்து ஆனது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய நாக சைதன்யா “நாங்கள் இருவரும் பிரிந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, நாங்கள் முறையாக விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிறது. சமந்தாவுடன் வாழ்ந்த அந்த நாட்களை நான் மிகவும் மதிக்கிறேன். அந்த நாட்களுக்கு தனி மரியாதை உண்டு.

சமந்தா ஒரு நல்ல பெண், சமூக வலைதளத்தில் வந்த வதந்தியால் தான் எங்களிடையே பிரச்னை முதலில் உண்டானது. நான் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன்பின் மொத்தமாக சூழல் மாறிவிட்டது. ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்னையாக இருந்தது இறுதியில் பெரிதாகி, கடைசியில் பிரிய வேண்டியதாகிவிட்டது” என கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். மேலும், நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 702

    3

    2