கொலை வழக்கில் சிக்கிய பிரபல நடிகருக்கு.. உதவி செய்ய மறுத்த மனோரமா: உண்மையை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
30 January 2023, 5:30 pm

தமிழ் சினிமாவில் 70, 80 களில் கொடிக்கட்டி பறந்த நாகேஷ் மற்றும் மனோரமா காமெடி ஜாம்பவான்களில் முக்கியமானவர்கள். அந்தகாலக்கட்டத்தில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் இணைந்து நடித்து மிகப்பெரிய ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

 nagesh kamal - updatenews360

அப்படி இருக்கும் போது நாகேஷ் மற்றும் மனோரமா இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் நாகேஷ் அவர்களின் மனைவியின் தம்பி, அப்போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகேஷ்க்கு சம்பந்தம் இருப்பதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை எப்படியாவது சமாளிக்க நாகேஷ், மனோரமாவை சந்தித்து பேசியதாகவும், அந்த வழக்கில் தனக்கு சாட்சியாக இருக்கும் படி நாகேஷ், மனோரமா கேட்டுள்ளாராம்.

nagesh kamal - updatenews360

மேலும் அன்று உங்கள் வீட்டில் நான் இருந்ததாக கூற வேண்டும் என்று நாகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தன்னால் அப்படி சாட்சி சொல்ல முடியாது என்று மனோரமா உதவி செய்ய மறுத்துவிட்டாராம். இதனால் நாகேஷ் மனோரமா மீது கோபமாக இருந்தாராம்.

nagesh kamal - updatenews360

இதனிடையே, அதன்பின் நாகேஷ் நிரபராதி என்று இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார். இதன் பின் மனோரமா – நாகேஷ் இடையில் விரிசல் ஏற்பட்டு இருவரும் சந்திக்காமல் இருந்து வந்ததாக, இந்த சம்பவத்தை சில ஆண்டுகளுக்கு முன் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தது தற்போது வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி