கொலை வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்.. காப்பாற்றிய MGR; சீக்ரெட்டை வெளியிட்ட பிரபலம்..!(வீடியோ)
Author: Vignesh17 February 2024, 1:38 pm
காமெடி மன்னன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் நாகேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து காலத்தால் அழியாத நடிகராக, தனது முத்திரையை படைத்தார். மேலும் துணை நடிகர், வில்லனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இதுவரை சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் போன்றே இருப்பதாக பரவலான கருத்து நிலவி வருகிறது. தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா, சிம்பு, அஜித் வரை 5 தலைமுறை நடிகர்களுக்கும் தனது நடிப்பின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நாகேஷ். அந்த காலத்திலே B.sc பட்டப்படிப்பு படித்துள்ள நாகேஷ் கல்லூரி முடித்ததும் தனது தந்தை வேலைபார்த்த இரயில்வே துறையில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.
இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு நாகேஷ் குறித்த பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ, தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மிகவும் கஷ்டப்பட்டு தான் நாகேஷ் சினிமாவில் நுழைந்ததாகவும், நாகேஷின் நடிப்பு திறமையை கவனித்த கே பாலச்சந்தர் தொடர்ந்து அவரை தனது படங்களில் நடிக்க வைத்தார்.
சர்வர் சுந்தரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக நாகேஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஒரே சமயத்தில் பல படங்களிலும் நடித்து வந்தார். தொடர்ந்து ஓய்வு இல்லாமல், படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு பக்கம் சினிமாவில் பிசி மறுபக்கம் மது பழக்கம் இப்படி இருக்கும் சூழ்நிலையில், நாகேஷ் குடும்பத்தை கவனிக்க தவறிவிட்டார்.
நாகேஷின் மனைவி மர்மமான முறையில் இறந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த பிரச்சனையில், இருந்த நாகேஷை எம்ஜிஆர் தான் காப்பாற்றினார் என்று ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்னிடம் கூறியிருந்தார். சினிமாவை தாண்டி நாகேஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம் கர்வம் பிடித்தவராக தான் இருப்பார் என்றும், பல பிரபலங்கள் முன்னதாகவே கூறியிருந்தார்கள்.
மேலும், நாகேஷ் பள்ளிக்கூடம் அருகே திரையரங்கு ஒன்றைக் கட்டி அந்த திரையரங்கிற்கு NOC கொடுக்கவில்லை. அது பிரச்சினையாக மாறியது. அந்த சமயத்தில் எம்ஜிஆர் தான் NOC வாங்கி கொடுத்தார். நாகேஷ் தியேட்டர் என்றாலே பிரபலம். இப்பொழுது கல்யாண மண்டபமாக மாற்றிவிட்டனர் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.