20 முறை வந்த மெசேஜ்.. கிளிக் செய்த நக்மாவின் செல்போனை ஹேக் செய்த மர்ம நபர்..! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி …!
Author: Vignesh9 March 2023, 5:00 pm
1994 -ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளியான காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நக்மா அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நக்மா தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர்.
இவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார்.
அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் நக்மாவின் சகோதரி ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்த நக்மா அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.
தற்போது மர்ம நபர் ஒருவர் நக்மாவின் போனில் தொடர்பு கொண்டு KYC விவரங்களை அப்டேட் செய்யுமாறு லிங்க் ஒன்றை பகிர்ந்த நிலையில், அதை நக்மா கிளிக் செய்து சில விவரங்களை அந்த மர்ம நபர்களுடன் பகிர்ந்ததாக தெரிகிறது. அப்போது நக்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து 99,998 ரூபாயை அந்த மர்ம நபர்கள் எடுத்து விட்டனர்.
மேலும், இதைத்தொடர்ந்து நடிகை நக்மாவிற்கு 20க்கும் மேற்பட்ட OTPகள் அவரின் மொபைல் போனிற்கு வந்ததால், இதனால் உடனடியாக மும்பை சைபர் கிரைமில் நடிகை நக்மா புகார் அளித்துள்ளார்.