காமெடி படமா? கவர்ச்சி படமா?.. நாய் சேகர் ரிட்டன்ஸில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை… அவரே வெளிட்ட புகைப்படம் வைரல்..!
Author: Rajesh6 March 2022, 11:03 am
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை சஞ்சனா சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், வடிவேலு உடன் அவர் இணைந்து நிற்கும் போட்டோ இடம் பெற்றுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் தான் நடிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனிடையே, இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்.
இதற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயண் இணைந்துள்ளார். அவரது கவர்ச்சிக்கென்றே ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் காமெடி படமா இருக்குமா அல்லது கவர்ச்சி படமா இருக்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.