அவ நல்லவன்னு நெனச்சி ஏமாந்துட்டேன்… மோசமான உறவில் இருந்தது குறித்து நகுல் ஓபன் டாக்..!
Author: Vignesh17 February 2024, 4:50 pm
நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிட்டாரிஸ்ட் அன இவர் பின்னணி பாடகரும் கூட. தற்போது இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் படித்த ஸ்ருதியை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். இவர்களுக்கு அகீரா என்ற பெண் குழந்தையும், அமோர் என்ற மகனும் உள்ளனர்.

சமீபத்தில் தன் மனைவி ஸ்ருதியுடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு சில விஷயங்கள் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில், ஸ்ருதியை மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருந்தும் பார்த்துக் கொள்ளாமல் இருந்தேன். உண்மையாக சொல்லணும் என்றால் ஸ்ருதியை காதலிக்கும் முன்பு மோசமான ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அதுவும் மிகவும் சிக்கலாக இருந்தது. அதன் பின்னர், வேண்டாம் சாமி என்று அவரை விட்டு ஒதுங்கி விட்டேன். நகுலுக்கு இவங்கதான் சரியாக இருப்பார்கள் என்று ஸ்ருதி அமைந்துவிட்டார் என்று நகுல் மனைவி குறித்து பெருமையாக கூறியுள்ளார்.