அப்படி மட்டும் நடந்திருந்தால் படுக்கையை பகிர்ந்திருப்பேன் – வெட்கமே இல்லாமல் கூறிய பிரபல நடிகை!
Author: Shree30 August 2023, 7:39 pm
வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் படவாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்ததுண்டா? என கேட்டதற்கு, இல்லை, ஆனால் எனக்கு அதற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஒருமுறை சீரியல் ஆடிஷன் ஒன்று இருக்கிறது. நீங்கள் பாண்டிச்சேரிக்கு வரவேண்டும். அங்கு இரண்டு நாட்கள் தங்கி டெஸ்ட் எடுப்பார்கள் என கூறி அழைத்தார்கள்.
இதை கேட்கும்போதே அப்பட்டமாக தெரிகிறது. எதற்காக கூப்பிடுகிறார்கள் என்று. மெகா சீரியலில் நடிப்பதற்கு யாராச்சும் 2 நாட்கள் தங்கி ஆடிஷன் செய்வார்களா. அப்போவே கண்டுபிடிச்சேன். அதனால் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஒருவேளை என் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்து அவர்களுக்காக நான் நடிக்கவேண்டும் என இருந்திருந்தால் நான் படுக்கையை பகிர்ந்திருக்கலாம் என வெளிப்படையாக கூறினார்.
ஆனால், எல்லா நடிகைகளுக்கும் எனக்கு அமைந்தது போன்று குடும்பம் அமையவில்லை. அவர்கள் நடிக்க போனால் வீட்டில் பசி தீரும், நிறைய கடன் தொல்லை, அன்றாட தேவைகளுக்கே கஷ்டம் என்ற சூழ்நிலையில் இருக்கும் நடிகைகள் வேறு வழி ஒன்றி அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஒப்புக்கொள்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால் இப்படியான ஆட்களிடம் இருந்து தப்பிப்பது கஷ்டம் என்றார் நக்ஷத்திர.