ஆபாசமா பேசிய தாத்தா… ரசிகர் என்ற பெயரில் இப்படியா? கொந்தளித்த நக்ஷத்திரா!
Author: Shree25 September 2023, 2:55 pm
வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு நடிகையாக எந்த மாதிரியான பிரச்சனைகளெல்லாம் சந்திக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, சமீபத்தில் ஒரு தாத்தா என்னை இன்ஸ்டாகிராமில் தொடர்புக்கொண்டு நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை என கூறினார். உங்களின் நிகழ்ச்சிகளெல்லாம் நன்றாக உள்ளது என கூறி பாராட்டிய அவர்,
பின்னர் என்னுடைய அழகை வர்ணிக்க ஆரம்பித்தார். படிப்படியாக அவரின் பேச்சுக்கள் சரியாக இல்லாததை உணர்ந்த நான் அந்த நபரை பிளாக் செய்துவிட்டேன். நான் சந்தித்த மோசமான நபர் என்றால் அந்த தாத்தா தான் என நக்ஷத்திரா கூறினார்.