வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில், திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பெரிய அளவில் சினிமா வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நக்ஷத்ரா ஒரு படத்தில் நடிக்கும் போது உடைமாற்றக் கூட இடம் இல்லை. என்னை ஒரு கேரவனின் சென்று உடைமாற்ற சொன்னார்கள். அந்த கேரவேனில் விண்டே ஏதும் இல்லை. முன் புறத்தில் கண்ணாடி மட்டுமே இருக்கிறது. வேனுக்கு வெளியே ஐந்து பேர் சேர் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். நான் உடை மாற்றுவது தெரிந்தும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு பெண் உடைமாற்றப் போகிறார் திரும்பி உட்கார வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை என்று நக்ஷத்ரா நாகேஷ் தெரிவித்து இருந்தார்.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.