அது பத்தி பேசுறது தப்பே இல்லை… பாலியல் உறவு குறித்து நகுல் மனைவி வெளிப்படை!
Author: Rajesh11 January 2024, 9:54 pm
நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கிட்டாரிஸ்ட் ஆன இவர் பின்னணி பாடகரும் கூட. தற்போது இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார்.
இவர் தன்னுடன் படித்த தோழி ஸ்ருதியை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். நகுல் தனது மனைவியின் பிரசவத்தை வாட்டர் பர்த் முறையில் தான் பெற்றார். அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட அது மிகப்பெரிய அளவில் வைரலானது. அது போல் நகுலின் மனைவி ஸ்ருதி தனது குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருவருமே வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள். இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலியல் துன்புறுத்தல் குறித்தும் உடலுறவு குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, பாலியல் வன்முறையை பொருத்தவரை அது சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அது தவறு தான். அதுபோன்ற தொல்லைகளுக்கு ஆளாகும் அந்த மனிதரை முழுவதுமாக மாற்றி விடும்.
பாலியல் வன்முறை என்பது உடல் ரீதியான வன்முறை மட்டும் இல்லை. அதில் வார்த்தை ரீதியான வன்முறை, மற்றும் மனரீதியாக துன்புறுத்தல் உள்ளிட்டவையும் அடங்கும். அதே போல் உடலுறவு, செக்ஸ் என்பது ஒன்றும் தவறான வார்த்தை கிடையாது. அது வயது பொறுத்து இருக்கவேண்டும். நாம் அனைவரும் நிச்சயம் அதை குறித்து நம் குழந்தைகளிடம் பேசவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.