ஜோசியத்தை நம்பி மனைவியை விவாகரத்து செய்த நடிகர்.. சொந்த செலவில் சூனியம் வைக்கிறது இதுதானா?..
Author: Vignesh30 May 2024, 6:46 pm
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். நடிகை நளினி மீது ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போதே ஒருதலைக் காதல் இருந்ததாம். இந்த விஷயம் நளினி குடும்பத்திற்கு தெரியவந்ததால் ராமராஜனை பிடித்து அடித்துவிட்டனர்.
இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், நளினி தமிழ் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்த நளினி, ராமராஜனை திருமணம் செய்து கொண்டு, நன்றாக போய் கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணத்தால் 2000 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நளினி தனது திருமண வாழ்க்கை பற்றி பேசியிருந்தார். அதில் அவர், ” நான் திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தாய் ஜோசியம் பார்க்க அழைத்து சென்றதாகவும், ஜோசியத்தில் இருவரும் திருமணம் ஆகி சில ஆண்டுகளில் பிரிந்துவிடுவார்கள் என சொன்னதாக தெரிவித்தார்.
மேலும், ராமராஜனும், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். திருமணம் ஆன 4 வருடங்களுக்கு பிறகு பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம் எனவும், அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம் என நாம தனியா இருப்போம். இல்லையென்றால், காலப்போக்கில் எனது புகழ் போயிடும் என்று அவர் கணித்தார். நானோ, ”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா… நம்ம ஜாதகம் அப்படிதான் இருக்கு, என்றார்.
மேலும் படிக்க: பிரபல நடிகையை பிளாக்மெயில் செய்த கமல்… வெளியான ப்ளூ ஃபிலிம்?… வீடு தேடி சண்டைக்கு சென்ற தாய்..!
ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியதுதான் நடந்தது என தெரிவித்துள்ளார். இவர்களுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர், இருவருமே நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கின்றனர், நளினியும் சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் மனைவியை பிரிந்த நேரமோ என்னமோ ராமராஜன் சினிமாவில் ஜொலிக்கவில்லை என பேசப்படுகிறது, கதாநாயகனாக தான் நடிப்பேன் என்ற கொள்கை கொண்ட ராமராஜன் விவாகரத்துக்கு பின்னர் 3 படங்கள் மட்டுமே நடிக்க படம் தோல்வியையே சந்தித்தது.
மேலும் படிக்க: பணம் இருக்கா என் மகளை கூட்டிட்டு போங்க.. உச்ச நடிகர் செய்த மோசமான செயல்..!
இதைப்போல பலரும் பேசியதாகவும், அதனால் சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதற்காக தாங்களே சந்தோசமாக பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் இன்றுவரை தன் கணவரை புகழ்ந்தே பேசிக்கொண்டிருக்கிறார் நளினி, இன்று வரை தன் கணவன் மீதான் காதல் குறையவில்லை என நெகிழ்கிறார். மேலும், ஒரு பேட்டியில் நளினி பேசும் போது ஏழு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு கணவராக அவர் மட்டுமே வர வேண்டும். ஜோசியத்தை நம்பித்தான் என்னை விவாகரத்து செய்தார். விவாகரத்து, செய்யும் போது கூட எனது கையைப் பிடித்துக் கொண்டுதான் இருந்தார். ராமராஜன் என்று தனது முன்னாள் கணவர் குறித்து நளினி உருக்கமாக பேசி இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சொந்த செலவில் சூனியம் வைக்கிறது இதுதானா? என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.