ஜெயலலிதா வற்புறுத்தியும் கேட்காத நளினி.. தன்னம்பிக்கை அதிகம் தான்.. நெகிழ வைத்த சம்பவம்..!

Author: Vignesh
16 October 2023, 3:28 pm

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நளினி, விஜயகாந்துடன் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார்.

nalini-updatenews360

1987-ல் நடிகர் ராமராஜனுடன் அவருடன் ஜோடியாக நடித்த நளினியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு, 13 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

nalini-updatenews360

இந்நிலையில், ராமராஜன் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ராமராஜன் மீது ஜெயலலிதாவிற்கு ஒரு அன்பு இருந்ததாம். அதனாலேயே நளினியை, ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். அதே நேரத்தில், இவர்கள் விவாகரத்து அறிந்த பின்னர் நளினி தன் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று தெரிந்ததும் ஜெயலலிதா பள்ளி படிப்பு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், நளினி இல்லை அம்மா அவர்கள் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்று கூறி அதை மறுத்து தன் சொந்த காலில் முன்னேறியுள்ளார்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!