அந்த ஒரு விஷயம்… கேரியரை தொலைத்து காணாமல் போன நடிகை நமீதா!!

Author: Vignesh
6 April 2023, 10:40 am

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஒரு நடிகை. மச்சான்ஸ் என செல்லமாக ரசிகர்களை அழைப்பார், எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் ஹாய் மச்சான்ஸ் என்று அவர் கூறும் அந்த வார்த்தை ரசிகர்களால் ரசிக்கப்படும்.

சினிமாவில் நுழைந்ததும் கொஞ்சம் ஹிட் படங்களில் நடித்த நமீதாவிற்கு அடுத்தடுத்து எந்த நல்ல படங்களும் அமையவில்லை.

ஆரம்பத்தில் குணச்சித்திர நடிகர்களாக திகழ்ந்து வரும் சத்யராஜ், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதற்கு காரணம், அந்த நடிகர்கள் தனக்கு சமமான உயரத்தில் இருப்பதால் தான் கரெக்டாக இருக்கும் என்று அவர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் கதைகளை சரியாக தேர்வு செய்வதில் நமீதா தவறு செய்தும் இருந்தார். இதன்பின் நமீதா உடல் எடையை ஏற்றியதால் கவர்ச்சி பக்கமும் சென்றார். அப்படி தான் அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படங்களுக்கு பின் எந்த வாய்ப்பை பெறாமல் காணாமல் போனார்.

பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வந்தார். பிக்பாஸ் முதல் சீசனிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு நடிகை நமீதா வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

உயரத்தை பொருட்படுத்தாமல் நமீதா சரியான கதையை ஆரம்பத்தில் இருந்து தேர்ந்தெடுத்து இருந்தால் நயன்தாரா அளவிற்கு கொஞ்சமாவது கேரியரை காப்பாற்றிருக்க முடிந்திருக்கும் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 764

    0

    0