ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் டா.. பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு அதவிட வெயிட்டுன்னு நிரூபிச்சிட்டாரே..!

Author: Vignesh
25 March 2024, 1:37 pm

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிகர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என மாஸ் காட்டி வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 60 வயதை கடந்தாலும், ஆக்ஷனில் இளம் ஹீரோகளுக்கு டப் கொடுக்கும் வகையில், இவர் இருந்து வருகிறார். தற்போது, அவரது சம்பளம் சொத்து கார்களின் கலெக்ஷன் ஆகியவற்றை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nandamuri Balakrishna

முன்னதாக, 1974 ஆம் ஆண்டு வெளியான தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலையா கடந்த 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதுவரை 108 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது, பஞ்ச் வசனம் ஆக்ஷன் என பாலையாவின் வெறித்தனமான நடிப்புக்கு டோலிவுட் ரசிகர்கள் சொக்கி கிடைக்கின்றனர். இவரது கண் அசைவில் கார்கள் பறப்பது, ஒரே மிதப்பில் லாரியை புரட்டி விடுவது என இது போன்ற வீர சாகசங்களை பாலைய்யா செய்தால் தான் ரசிகர்கள் நம்புவார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினியே பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nandamuri Balakrishna

அதேபோல், பாலையாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியும் இருக்கின்றன. பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தாலும், ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி ரூபாய் தான் இவர் சம்பளமாக வாங்கி வருகிறார். இருந்தாலும், சினிமா விளம்பரம் போன்றவர்களில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு 70 முதல் 80 கோடி வரை இவருக்கு வருமானம் கிடைக்கிறதாம். அதேபோல, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பாலைய்யாவின் வீட்டின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அரண்மனை மாதிரி கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் நீச்சல் குளம், லிப்ட் என சகல வசதிகளும் இருக்கிறது. இது தவிர மேலும் பல இடங்களிலும் இவருக்கு வீடுகள் உள்ளது.

Nandamuri Balakrishna

அதேபோல, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், போர்ஸ், பனமேரா கார்கள் தான் அதிகம் பயன்படுத்துவாராம். இந்த இரண்டு கார்களுமே, தலா இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரேஞ்ச் ரோவர், பென்ஸ் போன்ற கார்களும் சொந்தமாக வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பாலைய்யாவின் சொத்து மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்கும் என டோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!