சமந்தாவை விட அதிக துன்பத்தை அனுபவித்த பிரபல நடிகை… பாவம் இப்படி ஒரு நோயா?

Author: Shree
19 July 2023, 9:27 pm

நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். அதே லிஸ்டில் தான் நந்திதா ஸ்வேதாவும் இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரான தகவல் வெளியாகிள்ளது. ஆம் நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு சமந்தாவையே போன்றே ஃபைப்ரோமியால்ஜியா என்றும் நோய் தாக்கப்பட்டுள்ளதாம். இந்த நோயின் அறிகுறிகள், உடல்சோர்வு, வலி, தசைக்கூட்டு வலி, உணர்ச்சிகள் சமநிலையின்மை போன்றவற்றை என கூறப்படுகிறது.

இது குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ள நந்திதா ஸ்வேதா,”மூன்று ஆண்டுகளாக இந்த பிரச்சனையால் போராடி வருகிறேன். என்னால் அதிகம் நேரம் எந்த வேலையும் செய்ய முடியாது. சில நேரங்களில் உடல்நிலை மோசமடைந்து மிகவும் சிரமப்பட்டேன் ” என்று நந்திதா ஸ்வேதா கூறியுள்ளார்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!