திருமணத்திற்கு முன்பாகவே இப்படியா..? ரசிகரின் கேள்விக்கு நந்திதா ஸ்வேதா ஓப்பன் டாக்..!

Author: Rajesh
18 April 2022, 10:05 am

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா என்ற படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நந்திதா. நந்திதா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

அதில் அவர் பார்ப்பதற்கு குண்டாக இருந்ததால் சிலர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் செய்திருந்தனர். அதுமட்டுமின்றி அவரது வயிற்றில் சில சுருக்கங்கள் இருந்ததால், ரசிகர்கள் பலரும் என்ன திருமணத்திற்கு முன்பாகவே வயிற்றில் சுருக்கம் விழுந்து விட்டது என்பதுபோல கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனையடுத்து இதற்கு பதிலளித்த நந்திதா ஸ்வேதா கூறியதாவது, “என் வயிற்றில் இருக்கும் சுருக்கங்களை பார்த்து பலரும் கேள்வி கேட்கிறீர்கள். நான் Dhee நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறேன். 6 முதல் 7 மணி நேரம் வரை உட்கார்ந்தே இருக்கிறேன். அதற்கு இடையில் தான் சில போட்டோ ஷூட்களை செய்தேன்.

அந்த சுருக்கங்கள் பாவாடையால் நேர்ந்த கோடுகள் தான். ஒருவேளை அது சுருக்கமாகவோ இல்லை காயமாகவோ இருந்தாலும் அதை பற்றி கவலைப்பட தேவை இல்லை” என கூறியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1601

    4

    2