கண்ணெதிரே தீக்குளித்து இறந்த அம்மா… நாஞ்சில் விஜயன் வாழ்கையில் இவ்வளவு சோகமா?
Author: Rajesh4 February 2024, 9:40 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் தனது கெரியரை ஆரம்பித்து பின்னர் கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.
குறிப்பாக இவர் ராமருடன் பெண் வேடமிட்டு நடித்த காமெடி காட்சிகள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் ராமர் உடன் சேர்ந்து ’சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை’ போன்ற காமெடி எபிசோடு பட்டி தொட்டி எங்கும் படூப்பர் ஹிட் அடித்தது.
இன்றளவும் இந்த காமெடிக்கு மிகப்பெரிய மவுஸ் இருக்கிறது. மேலும், லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான விஷயங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்ட நாஞ்சில் விஜயன், என்னுடைய அப்பா மோசமான குடிகாரர். தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை கொடுமைப்படுத்துவார்.
அம்மா தான் வேலை செய்து எங்களை வளர்த்தார். ஒருகட்டத்தில் அப்பாவின் கொடுமை தாங்காமல் என் கண்ணெதிரிலேயே தீக்குளித்து இறந்துவிட்டார். அவர் துடித்து இறக்கும்போது தண்ணீர் கூட தரமுடியவில்லை என கண்ணீர் விட்டு கூறினார் நாஞ்சில் விஜயன்.