கேவலப்படுத்திய அறந்தாங்கி நிஷா… நீயா நானா மேடையில் செருப்படி கொடுத்த நாஞ்சில் விஜயன்(Video)

Author: Shree
20 October 2023, 5:08 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் தனது கெரியரை ஆரம்பித்து பின்னர் கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக இவர் ராமருடன் பெண் வேடமிட்டு நடித்த காமெடி காட்சிகள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் ராமர் உடன் சேர்ந்து ’சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை’ போன்ற காமெடி எபிசோடு பட்டி தொட்டி எங்கும் படூப்பர் ஹிட் அடித்தது. இன்றளவும் இந்த காமெடிக்கு மிகப்பெரிய மவுஸ் இருக்கிறது. மேலும், லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே கெட்டப்பில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது.

தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஷகிலா உடனான நேர்காணலில், ஏன் இப்போது விஜய் டிவியில் வருவதில்லை என்ற கேள்விக்கு, பதிலளித்த நாஞ்சில் விஜயன் வேற டீம் மாறிடுச்சு. இப்போதுள்ள புதிய டீம் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களை மட்டும் தான் உள்ளே நுழைத்து வாய்ப்பு கொடுப்பார்கள்.

நான் இன்னுமும் நிகழ்ச்சி தொகுப்பாளர் , தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து வாய்ப்புகள் கேட்டுத்தான் வருகிறேன். ஆனாலும் கிடைக்கவில்லை. நான் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளுக்கு ஆடியன்ஸை அழைத்து வரும் வேளையில் இருந்தேன் அப்படித்தான் புகழ் மற்றும் பாலா என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்கள் இப்போ நானே வாய்ப்பில்லாமல் தவிக்கிறேன் என வருந்தினார். இதனிடையே அண்மையில் தான் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடந்தது.

aranthangi nisha - updatenews360

இந்நிலையில் சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தொலைக்காட்சி பிரபலங்கள் தங்களது திறமைகளையும் திரை வாழ்க்கையும் பற்றி பேசினார்கள். அப்போது நாஞ்சில் விஜயனின் தங்கை ” என் அண்ணன் சிறுவயதில் பேச்சுப்போட்டிகளில் சிறப்பாக பேசுவார். இப்போ அதெல்லாம் பேசுறதில்லை என்பதை மிஸ் பண்றேன் என கூறினார். இதை கேட்ட அறந்தாங்கி நிஷா உடனே ” எம்மா சும்மா பொய் சொல்லதேம்மா” என நாஞ்சில் விஜயனை மேடையிலே கேவலப்படுத்தினார். உடனே மூச்சுவிடாமல் நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசி தனது பேச்சுதிறமையை காட்டி அந்த அரங்கத்தையே வியக்க வைத்தார் . நாஞ்சில் விஜயனின் பேச்சை கேட்டு கோபிநாத்தே மிரண்டுப்போனார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக எல்லோரும் நிஷாவை திட்டி வருவதோடு ” இதைத்தான் செருப்படி” என்பார்கள் என நிஷாவை விமர்சித்துள்ளனர்.

https://www.youtube.com/shorts/z6CnBupYr_8

  • Sawadeeka Songஅட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
  • Views: - 523

    2

    1