சூர்யாவை கொச்சையாக பேசிய இயக்குனர்.. பல வருடத்திற்கு பின்பு உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

Author: Vignesh
21 November 2023, 2:30 pm

பிரபல இயக்குனர் அமீர் சமீபத்தில் சூர்யா, கார்த்திக், சிவகுமார் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை பற்றி சர்ச்சையாக பேசிய விஷயம் இணையதளத்தில் வைரலானது. ஞானவேல் ராஜா அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் அமீரின் சுயரூபங்களை தற்போது, வெட்ட வெளிச்சமாக்கி கொண்டு வருகிறார்கள்.

K.E.Gnanavelraja

அதாவது 2016 ஆம் ஆண்டு அமீர் எங்களை தரக்குறைவாக பேசியது குறித்து நாங்கள் வாய் திறக்காமல் இருக்கிறோம். அமைதியாக இருக்க காரணம் சிவகுமார் சார் தான் அமீர் இப்படி பேசுவது குறித்து அவரிடம் கூறியதும், நீயும் சினிமாவில் இருக்க போற அமீரும் சினிமாவில் இருக்கப் போறான்.

அவரை தப்பா பேசாதே இருவரும் யார் நல்லவர்கள் என யாரிடமும் நிரூபிக்க போகிறீர்கள் உன் இயக்குனரை எங்கும் காயப்படுத்தி பேசிவிடாதே என்று கூறினார். தற்போது, பருத்திவீரன் படம் வெளியாகி பதினாறு ஆண்டுகளானதால் பருத்திவீரன் படத்தை ரீரிலிஸ் செய்தோம். அப்போது, அமீரிடம் எட்டு மணி நேரம் பேசினார். ஆறு மணி நேரம் என்னை திட்டியும், குடும்பத்தை திட்டியும் பேசினார்.

director amir - updatenews360

நான் ஒரே ஒரு கேள்வி கேட்டேன். நான் சூர்யா, கார்த்திக், சிவகுமார் எல்லோரும் கெட்டவர்கள். ஆனால், இன்றும் எங்களால் சினிமாவில் இருக்க முடியும். உங்களை எல்லோரும் பார்த்து தெரிந்து ஓடுகிறார்கள் என்று கேட்டதாகவும் கூறினார். மேலும், சூர்யாவை நந்தா படத்தில் கேவலமாக நடத்தினார் அமீர். சண்டை முற்றிப் போய் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனதாகவும், இசை வெளியீட்டு விழாவிற்கு கூட சூர்யா வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சண்டை போட்ட சூர்யா அண்ணவையே, அவர் கொச்சைப்படுத்தியதாக ஞானவேல் ராஜா பேசியுள்ளார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…