6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!

Author:
12 November 2024, 11:14 pm

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா என்ற பெண்ணுக்கு அண்மையில் ஜப்பானில் மிக பிரமாண்டமாக திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த மீனா, குஷ்பு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

தனுஷ் தசை அயர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருக்கு அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் அது பல விமர்சனத்திற்கு உள்ளாகியது தாலி கட்டவே முடியாத மகனுக்கு ஏன் திருமணம் செய்ய வேண்டும்? பாவம் அந்தப் பெண். . தனுஷுக்கு பொண்டாட்டி தேவையில்லை ஹோம் நர்ஸ் தான் தேவை அவருக்கு எல்லா எடுபிடி வேலையும் செய்வதற்காக தான் திருமணம் என்ற பெயரில் பொம்மை கல்யாணம் செய்து வைத்திருக்கிறார் நெப்போலியன் என்றெல்லாம் பலரும் விமர்சித்து தள்ளினார்கள்.

Napolean

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த விமர்சனங்கள் வந்து விழும் சமயத்தில் நடிகர் நெப்போலியன் மீண்டும் தன்னுடைய மகன் தனுஷுக்கு ஆறு மாதம் கழித்து திருமணம் செய்வேன் எனக் கூறி குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். அதாவது, அக்ஷயா மற்றும் தனுசுக்கு திருமணம் முடிந்த கையோடு மணமகள் இருவரும் ஜப்பானில் ஆறு மாதம் இருப்பார்கள்.

இதை அடுத்துதான் அமெரிக்காவுக்கு நாங்கள் செல்ல இருக்கிறோம். அங்கு சென்ற பிறகு மீண்டும் ஒருமுறை என்னுடைய மகனுக்கு அமெரிக்காவில் வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்து என் மருமகளை அங்கு இருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்துவேன் என நடிகர் நெப்போலியன் கூற… பணம் இருக்கிறது பத்து கல்யாணம் கூட நீங்க பண்ணலாம். ஆனால், எங்களை போன்ற ஏழைகளின் நிலைமை கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்களா? ஒரு கல்யாணம் பண்ணவே வழியில்லாமல் வாழ்க்கை அழிந்து போகிறது என கூறி வருகிறார்கள்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!