என்னால் அது முடியாதா? ஏன் அப்படி சொல்றீங்க? நெப்போலியன் மகன் உருக்கம்!

Author:
12 October 2024, 2:52 pm

நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் அதை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் வீல்சேரிலே அவரது வாழ்க்கை. சென்று கொண்டிருக்கிறது. இப்படியான சமயத்தில் நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றது.

napoleon updatenews360

அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது இப்படிப்பட்ட சமயத்தில் அவரது திருமணம் குறித்து பலர் விமர்சித்து வந்தார்கள். இப்படி இருக்கும் சமயத்தில் தனுஷுக்கு திருமணம் மிகவும் அவசியமா? அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியுமா? என்றெல்லாம் மிகவும் மோசமாக விமர்சித்து தள்ளிருந்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் தனுஷ் தற்போது உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருகிறார்.

அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
நீங்க எல்லாரும் என் திருமணத்திற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறியிருந்தீர்கள். நான் அதை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். பெரும்பாலானோர் என்னுடைய திருமணத்தைப் பற்றி பாசிட்டிவான கமெண்ட் போட்டு இருந்தீர்கள். சில பேர் நம்ம மிகவும் நெகட்டிவான கமெண்ட்களை போட்டு இருந்தார்கள்.

ஆனால், அதெல்லாம் என்னை ஒன்னும் பெருசா பாதிக்கவில்லை. அந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் எல்லாம் எனக்கு மோட்டிவேஷனா தான் இருந்தது. உங்களிடம் ஜெயிச்சு காட்ட வேண்டும். அதை என்னால் பண்ண முடியாது என்று சொன்னதை நான் புரூப் பண்ணி காட்ட வேண்டும் என்ற ஒரு முயற்சியில் நான் இருக்கிறேன்.

nepolean son

இதையும் படியுங்கள்: என் வருங்கால கணவர்… ஜெயம் ரவி – பட்டுன்னு போட்டுடைத்த பிரியங்கா மோகன்!

இந்த மாதிரி என்னை போல் இருப்பவர்களால் அதை பண்ண முடியும் பண்ண முடியாது அப்படின்னு சொல்லுவாங்க. அது எல்லாம் நீங்கள் கேட்காதீங்க. முடியல அப்படின்னு தோன்றிவிட்டால் தொடர்ந்து முயற்சியை செய்து கொண்டே இருங்கள். கண்டிப்பாக ஒருநாள. முயற்சி பலனளிக்கும் என நெப்போலியன் மகன் இந்த வீடியோவில் உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Maharaja movie box office in China பிராமண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 214

    0

    0