நொந்து போயிருக்கேன்.. மனசை நோகடிக்காதீங்க.. பதிலடி கொடுத்த நெப்போலியன்..!
Author: Udayachandran RadhaKrishnan3 October 2024, 2:38 pm
நடிகர் நெப்போலியனுடைய மகன் தனுஷுடைய திருமணம் அடுத்த மாசம் ஜப்பான்ல நடக்க இருக்கிற நிலையில ரொம்பவே எமோஷனலான வேண்டுகோள் ஒன்னு நெப்போலியன் வச்சிருக்காரு நடிகர் நெப்போலியனுக்கு ரெண்டு மகன்கள் இருக்காங்க.
இதுல தனுஷ்க்கு நாலு வயசு இருக்கும்போதே அவர் தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டதால அவரால நடக்க முடியாம போச்சு.
தன்னோட மகனோட ட்ரீட்மென்ட்காக அமெரிக்காவுக்கு போய் அங்கேயே செட்டில் ஆயிட்டாரு. இந்த நிலையில கடந்த ஆகஸ்ட் மாசம் நடிகர் நெப்போலியனுடைய மகன் தனுஷ்கும் திருநெல்வேலி மாவட்டம் மூலக்காரப்பட்டியை சேர்ந்த அக்சயா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துச்சு.
இவங்களுடைய திருமண நிச்சயமான சமயத்திலேயே சிலர் நெப்போலியன் மகனால இல்லற வாழ்க்கையில ஈடுபட முடியாது. அவருக்கு எந்த நேரத்துல எது வேணாலும் நடக்கலாம், பணத்தை காட்டி ஒரு பொண்ணோட வாழ்க்கையை நெப்போலியன் வீணாக்கிட்டாரு.
அந்த பெண், தனுஷ்க்கு நர்ஸாதான் இருக்க முடியும் மனைவியா இருக்க முடியாது அப்படின்னு எல்லாம் சில மூத்த பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்தனர்.
இதே போல நெட்டிசன்களும் நெகட்டிவ் கமெண்ட்டுகளை பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து நெப்போலியன் மகனோட திருமணத்தை நவம்பர் மாசம் ஏழாம் தேதி ஜப்பான்ல இருக்குற டோக்கியோ சிட்டில நடத்த போறதா அறிவிச்சிருக்காரு.
இந்த திருமண விழாவுல அரசியல், சினிமா பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் அப்படின்னு எல்லாருக்குமே இன்விடேஷன் கொடுத்துட்டாரு.
மேலும் இந்த திருமணத்துக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடி தன்னோட மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு கடல் வழியா ஜப்பானுக்கு கிளம்பிட்டாரு.
தற்போது எல்லாருமே டோக்கியோ சிட்டிக்கு போய் சேர்ந்துட்டாங்க. தனுஷுடைய உடல்நிலை காரணமா அவரால பிளைட்ல டிராவல் பண்ண முடியாது.
நெப்போலியன் அமெரிக்காவுல தன்னுடைய வீட்டிலிருந்து ஜப்பானுக்கு கிளம்புன நாள்ல இருந்து வழிநெடுக என்ன நடக்குது இந்த பயணம் எப்படி இருக்கு அப்படின்னு எல்லா நிகழ்வுகளையும் வீடியோவா தன்னோட சமூக வலைதள பக்கங்களில் ஷேர் பண்ணிட்டு இருக்காரு.
மேலும் இந்த திருமணத்துக்காக ₹200 கோடி வரைக்கும் செலவாகும் அப்படின்னு பட்ஜெட்டை பிளான் பண்ணி இருக்காங்க.
இந்த நிலையில மறுபடியும் தனுஷுடைய உடல்நிலை பற்றியும் இந்த திருமணம் பற்றியும் சிலர் தப்பா பேசிட்டு இருக்கிறதால நெப்போலியன் சில விஷயங்களை ரிக்வஸ்ட் பண்ணி போஸ்ட் போட்டு இருக்காரு.
அதுல அவர் என்ன சொல்லி இருக்காரு அப்படின்னா அன்பு நண்பர்களே உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே எங்கள் மூத்த மகன் தனுஷின் எட்டாண்டு காலக் கனவு இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள் மறுகோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓராண்டு ஆண்டுகாலம் திட்டமிட்டு ஆறு மாத காலமாக செயல் வடிவம் கொடுத்து ஒரு மாத காலமாக பயணம் செய்து உங்கள் அனைவரது வாழ்த்துக்களாலும் ஆசீர்வாதத்தாலும் தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.
எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு, அளவில்லா மனநிறைவு எங்களுக்கு, இந்த ஒரு தருணத்தில் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
மேலும் படிக்க: ரூ. 1 கோடி தரியா? இப்போவே வரேன்…. தயாரிப்பாளரின் வாழ்க்கையே நாசமாக்கிய திரிஷா!
எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும் நமது கனவுகளுக்காகவும் நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும், வாழ்ந்து பார்க்க வேண்டும், கடமையை நிறைவேற்ற வேண்டும், வாழ்க்கை ஒருமுறை தான் தான் வாழ்ந்து பார்ப்போமே.
இந்த உலகிற்கு நாம் வரும்போது எதையுமே கொண்டு வரவில்லை அதேபோல இந்த உலகை விட்டு போகும்போதும் எதையுமே கொண்டு போகப்
போவதில்லை.
அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம் போல நன்றாக வாழுங்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள் குறை கூறாதீர்கள், பழிக்காதீர்கள் உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்.
உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறவாதீர்கள். எல்லாரையும் வாழ்த்துங்கள் பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள். அது உங்களுக்கே ஒரு நாள் திரும்பிவிடும்.
எண்ணம் தான் வாழ்க்கை நன்றாக எண்ணுங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் பல..
தன்னோட மகன் தனுஷுடைய உடல்நிலை பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் தப்பா பேசாதீங்க அப்படின்னு ரிக்வஸ்ட் பண்ணி கேட்டிருக்காரு
0
0