விவசாயம் முதல் இரவு பார்ட்டி வரை… சகல வசதிகள் கொண்ட நெப்போலியனின் அமெரிக்க பண்ணை வீடு!

Author: Rajesh
19 December 2023, 2:29 pm

நெப்போலியன் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆறடிக்கும் மேல் உயரம், கம்பீரமான ராஜநடை, முறுக்கு மீசை என பக்கா கிராமத்து மெட்டீரியலாக திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், போலீஸ் கேரக்டர்களுக்கும் அம்சமாக பொருந்திப் போனார்.

நெப்போலியன் ஹீரோ, வில்லன் கெஸ்ட் ரோல் என வலம் வந்த ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்திருந்தார். நெப்போலியனுக்கு கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் தரமான கம்பேக் கொடுத்தன. அதேபோல், நெப்போலியன் கமலுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இறுதியாக கார்த்தியுடன் நடித்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனிடையே சினிமா, அரசியல் என பயணித்துக் கொண்டிருந்த நெப்போலியன், ‘ஜீவன் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார். நெப்போலியனின் ஐடி நிறுவனம் சென்னை, அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.

பல வருடங்களாகவே அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் வீட்டிற்கு யூடியூப் பிரபலம் இர்பான் அவரின் வீட்டிற்கு சென்று வீடியோ வெளியிட்டதில் அனைவருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் நெப்போலியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்காவில் உள்ள தனது பண்ணை வீட்டில் உள்ள சகல விஷயங்கள் குறித்து கூறினார்.

இந்த தோட்டத்தில் விவசாயம், வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பார்ட்டி ஹால், விவசாயத்திற்கு தேவையான 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் , 250 மாடுகள், ஆடுகள் , கோழி , குதிரை, மான் வேட்டைகள் என சகலமும் உள்ளதாம். மேலும், அந்த பண்ணை வீட்டில் 3 பெட்ரூம் வசதியுடன் கூடிய இயற்கையான அம்சங்கள் சார்ந்த பல பொருட்கள் உள்ளதாம்.

அத்துடன் வீட்டின் பின் புறம் நீச்சல் குளம், தந்தூரி செய்ய பிரத்யே அடுப்புகள், ரூ.16 லட்சம் மதிப்புள்ள ஒரே மரத்தில் செய்யப்பட்ட அழகான டைனிங் டேபிள் என பார்த்து பார்த்து தனக்கு பிடித்தார் போல் வசதிகள் செய்து வைத்துள்ளாராம்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?