நெப்போலியன் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆறடிக்கும் மேல் உயரம், கம்பீரமான ராஜநடை, முறுக்கு மீசை என பக்கா கிராமத்து மெட்டீரியலாக திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், போலீஸ் கேரக்டர்களுக்கும் அம்சமாக பொருந்திப் போனார்.
நெப்போலியன் ஹீரோ, வில்லன் கெஸ்ட் ரோல் என வலம் வந்த ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்திருந்தார். நெப்போலியனுக்கு கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் தரமான கம்பேக் கொடுத்தன. அதேபோல், நெப்போலியன் கமலுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இறுதியாக கார்த்தியுடன் நடித்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனிடையே சினிமா, அரசியல் என பயணித்துக் கொண்டிருந்த நெப்போலியன், ‘ஜீவன் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார். நெப்போலியனின் ஐடி நிறுவனம் சென்னை, அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.
பல வருடங்களாகவே அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் வீட்டிற்கு யூடியூப் பிரபலம் இர்பான் அவரின் வீட்டிற்கு சென்று வீடியோ வெளியிட்டதில் அனைவருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியனுக்கு நடிகை குஷ்பு, மீனா உள்ளிட்டோர் அமெரிக்கா சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அவர்களுடன் நெப்போலியன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர்களுக்காக நெப்போலியன் ஒரு பிரத்யேக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதில் இரபானும் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.