கல்யாணத்துக்கு முன்னாடியே அது நடந்துருச்சு.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகர் நரேனின் மனைவி..!
Author: Vignesh24 December 2023, 6:42 pm
மலையாள சினிமாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான நிழலுகுத்து என்ற படத்தின் மூலமாக நடிகர் நரேன் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து, தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். முகமூடி படத்தில் மீண்டும் மிஸ்கின் இயக்கத்தில் நடித்திருந்தார். ஆனால், அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனை அடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் இன்ஸ்பெக்டர் பிஜாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், விக்ரம் படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். 2007 இல் தொகுப்பாளரான மஞ்சு ஹரிதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 14 வயதில் தன்மையா என்ற மகள் இருக்கும் நிலையில், பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் இரண்டாம் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் நரேன் மனைவி மஞ்சு ஹரிதாஸ் சமீபத்தில், Youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் தொகுப்பாளினியாக இருந்த போது நரேனை பார்த்ததாகவும், இரு ஆண்டுகள் இருவரும் டேட்டிங் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 2007-க்கு பின்னர் தான் திருமணம் செய்து கொண்டோம்.
இப்போது, எனக்கு இருக்கும் ஒரேவேலை என் மகன் ஓம்கார்-ஐ பார்த்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கணவர் நடிக்கும் படத்தின் கதை குறித்து தன்னிடம் எப்போதும் சொல்வார். ஆனால், அதை கேட்டுக்கொள்வேன் கதை விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று நரேனின் மனைவி மஞ்சு ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.