பணத்தாசை பிடித்த பவித்ரா – ரூ.1500 கோடிக்காக 60 வயது நடிகரை மணந்த 44 வயது நடிகை!

Author: Shree
18 March 2023, 11:22 am

தெலுங்கு சினிமாவின் சர்ச்சைக்குரிய மூத்த நடிகரும் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபுவை 44 வயதான நடிகை பவித்ரா நான்காம் திருமணம் செய்துள்ளது டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

60 வயதாகும் நடிகர் நரேஷ் பாபு ஏற்கனவே மூன்று திருமணம் ஆனவர். இவர் கன்னட திரைப்பட நடிகையான பவித்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள பவித்ரா,

தமிழிலும் விஷாலின் அயோக்கியா, விஜய் சேதுபதியின் கா.பெ.ரணசிங்கம், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘வீட்டில் விசேஷம்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் சுரேந்தர் பிரசாத் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் பெற்றார் . பின்னர் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். கணவரை பிரிந்த உடனே நரேஷ் பாபுவுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து புத்தாண்டு அன்று லிப்லாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு காதலை அறிவித்தார். இதையடுத்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து பவித்ராவின் முன்னாள் கணவர் சுரேந்தர் பிரசாத், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பவித்ரா அதற்காக எதையும் செய்துவிடுவார். அப்படித்தான் நரேஷ் பாபுவின் 1500 கோடி சொத்தை அபரிக்கத்தான் அவரை திருமணம் செய்திருக்கிறார்.

பணத்துக்காக என்னை விவாகரத்து செய்தவர் பவித்ரா என்பதை நரேஷ் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது இந்த புதுமண ஜோடி ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ