என் கணவருடைய எனர்ஜி 10 ஆளுக்கு சமம்…வெளிப்படையாக பேசிய நரேஷ் பாபுவின் 4வது மனைவி..!

Author: Selvan
21 January 2025, 5:27 pm

64 வயதில் எப்படி….மனைவியே ஆச்சர்யம்.!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நரேஷ் பாபு,இவர் தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி மற்றும் தமிழிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Naresh Babu fourth marriage

இவர் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மகளை திருமணம் செய்து ஒரு மகன் பிறந்த நிலையில் இருவரும் பிரிந்தனர்,பின்பு இரண்டாவதாக ரேகா சுப்ரியாவை திருமணம் செய்து அவரையும் பிரிந்தார்.அதன் பிறகு தன்னுடைய 50வது வயதில் 30வயது ஆன ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்து அவர்கூடயும் சேர்ந்து வாழாமல் சிறிது நாட்களில் பிரிந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய 60வது வயதில் நடிகை பவித்ரா லோகேஷுடன் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு பிறகு திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: மீண்டும் அலப்பறை செய்த ஜெயிலர் பட வில்லன்…நடவடிக்கை எடுக்குமா கேரளா சினிமா துறை..!

நடிகை பவித்ராவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்,இந்நிலையில் சமீபத்தில் நரேஷ் பாபுவின் பிறந்த நாள் விழாவில் அவரது 4வது மனைவி பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தன்னுடைய கணவர் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு,சாமி கும்பிட்ட பிறகு தான் அடுத்தகட்ட வேலைகளில் ஈடுபடுவார்,அதே போல என்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையா அனைத்தையும் பார்த்து பார்த்து பொறுமையாக செய்து கொடுப்பர்,அவர் சாதாரண ஆளே இல்லை அவர்கிட்ட 10 ஆட்களுடைய எனர்ஜி இருக்கிறது,அவரை மாதிரி என்னால் இப்படியெல்லாம் செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பார்.பவித்ரா லோகேஷின் இந்த பேச்சு இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் பலர் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?