‘முத்தம் To தர்ம அடி வரை’… பிரபல நடிகையை 4-வது தாரமாக மணக்கும் 60 வயது நடிகர் குறித்து பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட 3-வது மனைவி..!

Author: Vignesh
14 January 2023, 6:00 pm

சென்னை தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் பரவியது. நரேஷும் 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். 3வதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் சமீபத்தில் விவாகரத்து செய்து உள்ளார்.

இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த போது, 3வது மனைவியான ரம்யா ரகுபதி அங்கு சென்று அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். அப்போது, போலீசார் குறுக்கிட்டு, அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

பவித்ரா லோகேஷ் சினிமாவில் அம்மா வேடங்களுக்கு புகழ்பெற்றவர். இவர் பல படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் 2018ஆம் ஆண்டு ‘சம்மோகனம்’ படப்பிடிப்பின் போது சந்தித்தனர். இருவரும் நெருங்கிய உறவை வளர்த்து கொண்டனர்.

நரேஷ், பவித்ரா லோகேஷ் இருவரும் ‘அண்டாரு பாகுந்தலி அந்துல நேனுந்தலி’, ‘மிடில் கிளாஸ் அப்பா’, ‘ஹேப்பி வெட்டிங்’, ‘ராமராவ் ஆன் டூட்டி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் வெளியிட்டு உள்ள புத்தாண்டு செய்தியில் “புதிய ஆண்டு. புதிய தொடக்கங்கள். உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும். எங்களிடமிருந்து உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். – பவித்ரா நரேஷ்,” என்று அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்த நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா இதுகுறித்து கூறுகையில் நரேஷ் தன்னிடம் வயது குறித்து பொய் சொல்லியதாகவும் அவருக்கும் தனக்கும் 20 வயதிற்கு வித்தியாசம் என்று பிறகுதான் தெரிந்தது என்று கூறினார்.

அதோடு திருமணம் செய்வதற்கு முன் உடலுறவுக்கு தன்னை வற்புறுத்தி வந்ததாகவும், சில சமயங்களில் திருமணம் வேண்டாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறினாராம், அதோடு ஆசை வார்த்தைகளால் தன்னை மயக்கி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

Naresh_Pavitra_Ramya_updatenews360

மேலும் தனக்கு விவாகரத்து தேவையில்லை என்றும், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவனுக்கு அம்மா அப்பா இருவருமே தேவை அதனால் தான் எக்காரணம் கொண்டும் விவாகரத்து தரப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், நரேஷ் தன்னுடைய அரசியல் பின்னணி பார்த்துதான் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த நிலையில் அவருக்கு தேவையான அரசியல் உதவி இல்லை என்பதால் இப்படி நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் பவித்ராவின் கழுத்தில் இருக்கும் வைர நெக்லஸ் தன்னுடைய மாமியாருடையது, அவர் 2014ல் இதை வாங்கியதாகவும், இவர் அந்த நெக்லஸை அணிந்திருப்பதை தான் பலமுறை பார்த்திருப்பதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Naresh_Pavitra_Ramya_updatenews360

இது குறித்து நடிகை பவித்ரா தெரிவிக்கையில், தான் ஒரு நடிகை எனக்கு தேவையான பொருட்களை தன்னால் வாங்க முடியும், நகை மட்டுமல்ல, வீடு, கார் என பல சொத்துக்களை வாங்கும் சக்தி தனக்கு இருப்பதாகவும், இதற்கு தன்னிடம் ஆதாரமும் உள்ளது என்றும், நான் பொதுவாக பெங்களூருவில் தான் நகைகள் வாங்குவேன், யாரும் தனக்கு பரிசளிக்கவில்லை என்றும், நடிகர் நரேஷும் தன்னை நாங்காவது திருமணம் செய்யவில்லை என்றும், விவாகரத்தும் நடக்கவில்லை எனவும், எங்கள் இருவரிடையே இருப்பது வெறும் நட்பான உறவு மட்டும்தான், என விளக்கமளித்தார். மேலும், அவரின் மனைவி ரம்யாதான் தன்மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார் என்றும் தன் மீதான குற்றங்களை நடிகை பவித்ரா மறுத்திருந்தார்.

  • Allu Arjun controversy Pushpa 2 அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
  • Views: - 508

    0

    2