“எனக்கு அது ரொம்ப பயமாவும், பெரிய பிரச்னையாவும் இருந்துச்சு..” – பிரபல நடிகர் நாசர் ஓபன் டாக்..!
Author: Vignesh10 February 2023, 1:30 pm
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் நாசர். இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாசர், அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “தான் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்ற பெரிய எண்ணம் இல்லை என்றும், ஆனால் சூழ்நிலை தன்னை மாற்றிவிட்டதாகவும், தன் தந்தைக்கு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரிய விருப்பம் இருந்ததாகவும்,” தெரிவித்துள்ளார்.

மேலும், “தன்னுடைய மூக்கு கிளி மூக்கு போன்று இருக்கிறது என்று பலரும் கேலி செய்ததாகவும், தான் பள்ளியில் படிக்கும் போது தன்னை கிளி மூக்கு என்று பலரும் அழைத்தது மன வருத்தத்தை கொடுத்ததாகவும், அதுமட்டுமின்றி தன்னுடைய நெத்தியும் பெரிதாக தோற்றமளிப்தால் தனக்கு வருத்தத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.”

“இதனால் தனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானதாகவும், அதோடு பட வாய்ப்பு தேட கூட பயந்து தயங்கியதாகவும், இயக்குனர் பாலசந்தர் சார் தான் திரைத்துறையில் வாழ்க்கை கொடுத்தார்” என நடிகர் நாசர் வெளிப்படையாக பேசியுள்ளார்.