57 வயசுல இவ்ளோ பிட்; 80’S நடிகையைப் பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்,..

Author: Sudha
14 July 2024, 1:11 pm

நதியா மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பிடித்தார். 80 களில் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் ரசிகர்களிடம் நதியா உண்டாக்கிய தாக்கத்தை யாராலும் மறுக்க முடியாது.எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் – நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை,நதியா லேடீஸ் சைக்கிள் ஆகியவை நதியாவின் பெயரால் பிரபலமானது.

இவரது இயற்பெயர் சரீனா அநூஷா மொய்து 1984-94 காலகட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற தமிழ்த் திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமானார் , அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது. 2013 ஆம் ஆண்டில், தெலுங்கு திரைப்படமான மிர்ச்சியில் நடிகர் பிரபாஸின் தாயாகவும், அத்தாரிண்டிகி தாரேதியில் ஒரு பிடிவாதமான அத்தையாகவும், அவர் நடித்த இரு பாத்திரங்களும் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது . 2013 ஆம் ஆண்டில் அத்தாரிண்டிகி தாரேதியில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருதைப் பெற்றார்.

நடிகை நதியாவுக்கு தற்போது 57 வயதாகிறது.இந்த வயதிலும் தன்னுடைய உடம்பை சரியாக பராமரித்து வருகிறார்.திரைத்துறையில் இளமையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார் நதியா. இதைக்கண்ட பலரும் இந்த வயசுல எப்படி இருக்காங்கப்பா என்று பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C9UprBNvu7b/?utm_source=ig_web_button_share_sheet

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu