சந்திரயான் 3 வெற்றிபெற்ற நேரத்தில் “ராக்கெட்ரி” படத்திற்கு தேசிய விருது – பெருமையுடன் ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்!
Author: Shree24 August 2023, 10:43 pm
இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ராகெட்ரி: நம்பி விளைவு. இதில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்திருந்தார். அவருடன் நடிகை சிம்ரன் நடித்திருந்தார்.
மாதவனே இணைந்து தயாரித்து, இணைந்து இயக்கிய இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தின் கதை, நம்பி நாராயணன் பிரன்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டதாரிமாணவராக இருந்த நாட்களையும், அவர் மீது தவறான உளவுச் குற்றச்சாட்டுக்கள் பதிந்ததைப் பற்றியும் கூறியிருந்தது. இந்நிலையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சந்திரயான் – 3 விண்கலம் 41 நாட்கள் பயணத்துக்குப் பின் நேற்று மாலை 6:04 மணிக்கு நிலவில் கால் பதித்தது. இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்ந்தது. இதனை மக்கள் அனைவரும் பெருமிதத்தோடு கொண்டாடி வரும் வேலையில் விண்வெளி சம்பந்தப்பட்டும் விண்வெளி விஞ்சானி சம்மந்தப்படும் வெளியாகிய ராக்கெட்ரி திரைப்படத்திற்கு இன்று தேசிய விருது கிடைத்திருப்பது மிகப்பொருத்தமாக இருப்பதாக மக்கள் பெருமிதத்தோடு கூறி வருகிறார்கள்.