விஜய் மகனுக்காக கதை எழுதிய தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் : 2024ல் கதாநாயகனாக அறிமுகமாகிறார்?
Author: Udayachandran RadhaKrishnan13 February 2023, 1:32 pm
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் பட்டியலில் தனக்கென் தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். வசூல் சக்கரவர்த்தியாக வலம் வரும் விஜய்யுடன் நடிக்க, இயக்க ஏகப்பட்ட பிரபலங்கள் போட்டா போட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்யின் மகனை வைத்து படம் இயக்க பிரபல இயக்குநர் தயாராகியுள்ளார். சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. சூர்யா கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க, அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் தன்னுடைய கதை ஒன்றை விஜய்யின் மகன் சஞ்சய்காக எழுதியுள்ளார். சஞ்சையை கதாநாயகனாக்கி இயக்க முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் சஞ்சய் நடிப்பை விட இயக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவதால் எப்படியாவது அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைக்க தொடர் முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.