நாட்டாமை டீச்சர் முன்ன விட இப்போ சூப்பரா இருக்காங்கோ !

Author: Rajesh
23 March 2022, 1:19 pm

ராமராஜன் நடிப்பில் வெளியான “வில்லுபாட்டுக்காரன்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராணி. இவர் தெலுங்கு சினிமாவில் முதலில் தயாரிப்பாளராகத்தான் அடியெடுத்துவைத்தாராம், அதன்பின் நடிகையாக தமிழில் உருவெடுத்துள்ளார். அதன்பின் தமிழ், தெலுங்கு என சிலமொழி படங்களில் நடித்த பிரபலமடைந்தார். இவருக்கு தமிழில் அனைவராலும் பாராட்டப்பட்ட படமாகவும் அனைத்து தரப்பினரிடையே இவரின் புகழுக்கு உறுதுணையாக இருந்த திரைப்படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி சரத்குமார் நடித்த “நாட்டாமை” திரைப்படம் தான்.

இப்படத்தில் டீச்சராக நடித்த ராணி அனைவராலும் நாட்டாமை டீச்சர் ராணி என்றே அழைக்கப்பட்டார். இவர் பல பேட்டிகளில் நாட்டாமை படம்தான் எனக்கு மிகப்பெரிய மைல்கல் என்று அடிக்கடி கூறுவார். இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்திலும் ‘ஒ போடு’ பாடலுக்கு நடனமாடியிருப்பார்.

ராணி 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளராம். தற்போது இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்குப்பின் தெலுங்கு படத்தில் மட்டும் நடித்துவரும் இவர், திரைப்படங்களில் நடிப்பதைவிட குடும்பத்தை கவனிப்பதே எனது முக்கிய பொறுப்பு என்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது பயங்கர வைரல் ஆகி வருகிறது, மேலும் அந்த படத்தின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் இப்பவும் கவர்ச்சி காட்டி வருகிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 3501

    103

    25