பேட்ட பட வில்லன் சொன்ன திருமணம் பற்றிய கருத்து :தனது வாழ்க்கையைத்தான் மறைமுகமாக சொல்கிறாரா ?

Author: Sudha
2 July 2024, 8:03 pm

பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் நவாசுதீன் சித்திக் இவரும் இவருடைய மனைவி ஆலியா இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்

ஒருவர் மேல் ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர் நாவாசுதீன் சித்திக் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவருடைய மனைவியும் தன்னிடம் பணம் பறிக்க தன்னுடைய மனைவி முயற்சிப்பதாக நவாசுதீன் சித்திக்கும் மாறி மாறி புகார் அளித்திருந்தனர்

இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இருவரும் தங்களுடைய மனக்கசப்பை மறந்து குழந்தைகளுக்காக கடந்த மார்ச் மாதம் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.

இந்த சூழ்நிலையில் திருமணம் குறித்து சர்ச்சை கருத்தை நவாசுதீன் சித்திக் வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்று விடும். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே இருக்கிற பரஸ்பரம் காதல், அன்பு குறைய தொடங்குகிறது நீங்கள் ஒருவரை நிஜமாகவே காதலித்தாலோ அவரை எப்போதும் காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

நவாசுதீனின் இந்த கருத்தால் மீண்டும் இருவருக்குள்ளும் பிரச்சனை இருக்குமோ என்று தகவல் பரவுகிறது

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!