பெத்த பொண்ணுக்கு பாலியல் தொல்லை… நவாசுதீன் மீது புது புயலை கிளப்பிய மாஜி மனைவி!
Author: Shree10 March 2023, 12:19 pm
பாலிவுட் சினிமாவில் கேரக்டர் ரோல் , வில்லன் ரோல் என நடித்து நட்சத்திர நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இவர் 2010ஆம் ஆண்டு ஜைனப் எனும் ஆலியா அஞ்சனாவை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் சட்டரீதியாக விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு கடந்த ஓராண்டாக தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.
அவ்வப்போது அவரது மனைவி அவதூறு குற்றங்களை கூறி பரபரப்பு ஏற்படுத்துவார். அந்தவகையில் தற்போது கணவரால் என் மகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, “ஒரு பொறுப்பற்ற தந்தையாக, ‘நீங்கள் என் மகளை உங்கள் மேனேஜருடன் வேறு நாட்டுக்கு அனுப்பி, எனக்கு தெரியாமலும், சம்மதம் இல்லாமலும் ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்தீர்கள்.
அப்போது உங்க மேனேஜர் எனது மகளை தகாத முறையில் பலமுறை கட்டிப்பிடித்தார், அவள் எதிர்ப்புகளை மீறி இவை அனைத்தும் செய்யப்பட்டன. நானோ நீங்களோ இல்லாதபோது உங்கள் மேனேஜர் இதனை செய்துள்ளார் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.
நீங்கள் இன்னும் அவரை கண்மூடித்தனமாக நம்புவதாகக் கூறினீர்கள். என் மகளைப் பெற்ற தாயாக நான் என்ன நடந்தது என்பதை எதிர்த்தபோது எங்களை அச்சுறுத்தினீர்கள் அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.