பில்லா படத்தின் சாயலில் அட்லியின் புதிய படம் ? – சுயமா யோசிக்கிறதுக்கு நேரம் இல்ல போல…!

Author: Rajesh
24 March 2022, 11:44 am

நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் 2 காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மற்ற மொழிப் படங்களிலும் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார்.


அதுமட்டுமல்லாமல் நயன்தாரா தொழில் துறையிலும் தனி பாதை அமைத்து அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நயன்தாரா பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் லயன். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக நயன்தாரா மும்பை செல்ல உள்ளார். ஏப்ரல் முதல் வாரத்தில் நயன்தாராவுக்குகான படப்பிடிப்பில் இருக்கும் என கூறப்படுகிறது. லயன் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். ஷாருக்கானின் இரட்டை கதாபாத்திரத்தில் நல்லவராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இருக்கும் ஷாருக்கானை தான் நயன்தாரா காதல் செய்வது போல் படத்தின் கதை அமைந்துள்ளதாம். இப்படத்தில் நயன்தாரா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பில்லா படத்தில் நயன்தாரா வில்லன் அஜித் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார் அதேபோல சாயல் இதிலேயும் பிரதிபலித்துள்ளது. மேலும் இப்படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பிரியாமணியும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1439

    0

    0