இன்ஸ்டா பிரபலத்திடம் பேரம் பேசிய நயன்தாரா…சர்ச்சையில் சிக்கிய வைரல் வீடியோ..!
Author: Selvan20 January 2025, 2:08 pm
அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் சமீப காலமாக நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி பல வித சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.இந்த நிலையில் நயன்தாராவின் ஃபெமி நாப்கின் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழா சமீபத்தில் மதுரையில் நடந்தது.
இதையும் படியுங்க: கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!
இவ்விழாவிற்கு சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் பல நபர்களை அழைத்திருந்தார்கள்.காலையில் 9 மணிக்கு நயன்தாரா விழாவிற்கு வருவார்கள் என்று கூறப்பட்ட நிலையில்,மாலை 3 மணிக்கு தான் விழா நடைபெறும் இடத்திற்கு தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்தார்.அப்போது நிகழ்ச்சி முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நயன் மற்றும் விக்னேஷ் சிவனை பார்த்து கொஞ்சோ அமைதியாக இருங்கள்,அவர்கள் நார்மல் பீப்பிள் இல்லை என்று பேசிய வீடியோ படு வைரல் ஆனது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளை வீடியோவாக எடுத்து adipoli foodie இன்ஸ்டாவில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டது.அதில் அந்த இன்ஸ்டா பிரபலம்,உணவு கூட வழங்காமல் ரொம்ப நேரமாக காத்திருக்க வைத்து விட்டனர்,மேலும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ஒழுங்காக நடந்த வில்லை என பல குற்றசாட்டுகளை முன் வைத்தார்.ஆனால் வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்தில் அந்த வீடியோ டெலீட் ஆனது.
இதுபற்றி அந்த ஐடி-யின் உரிமையாளர் ஒரு புது வீடீயோவை பதிவிட்டுள்ளார்.அதில் அந்த டெலீட் செய்த வீடியோ போட்டவுடன் நயன்தாரா தரப்பிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது,அப்போது அவர்கள் வீடீயோவை உடனடியாக டெலீட் செய்யுங்கள்,இதனால் எங்கள் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்கள்.மேலும் உங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு என்ன வருமானம் வருமோ அதனை கொடுத்து விடுகிறோம் என்று கூறினார்கள்,ஆனால் அந்த இன்ஸ்டா பிரபலம் மறுக்கவே,பிறகு ஸ்ட்ரைக் அடித்து அந்த வீடீயோவை டெலீட் செய்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.