உன் படத்தில் எனக்கு எதாவது ரோல் இருக்குமா..? இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு கால் செய்து வாய்ப்பு தேடிய சூப்பர் ஸ்டார் நடிகை..!

Author: Vignesh
14 December 2022, 6:05 pm

நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர். ஐய்யா படத்தில் தமிழில் நடிக்க ஆரம்பித்த நயன்தாரா தற்போது 81வது படம் வரை கமிட்டாகி நடித்து வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை பெற்றிருந்தார் நயன். இந்நிலையில் பிரபல எழுத்தாளர்களான சுரேஷ் மற்றும் பாலக்கிருஷ்ணன் இருவரும் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிகொடுத்துள்ளனர். அதில் அஜித் பற்றிய பல தகவல்களை கூறியும் இருந்தார். அதன்பின் நயன் தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் கத்தி மிரளவைத்த விசயம் குறித்தும் கூறியுள்ளனர்.

Nayanthara_Updatenews360-1

நயன் தாரா பிரபுதேவாவை காதலித்து பின் அவரை விட்டு பிரிந்த சமயம். சினிமாவைவிட்டே விலகி, பின் வாய்ப்புக்காக தேடினார். கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு கால் செய்துள்ளார் நயன்தாரா. உன் படத்தில் எனக்கு எதாவது ரோல் இருக்குமா என்று வாய்ப்பு கேட்டார். விஷ்ணுவர்தனும் எங்களிடம் கேட்டு அந்த கதாபாத்திரம் ஓகே என்று கூறினோம்.

nayanthara_updatenews360

அப்போது, புல்லட் புரூப் காட்சி சமயத்தில் புல்லட் பிரூப் இல்லை. இதனால் கோபப்பட்டு அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டார் விஷ்ணுவர்தன். அப்போது நயன் தாரா தான் கிளாப் பிடித்தார். அனைவரும் கத்திய நிலையில் இருக்கும் போது நயன் தாரா கத்தி சைலன்ஸ் என்று கூச்சலிட்டு பயமுறுத்தினார். இருந்தவர்கள் அப்போது மிரண்டு போய் வாய்மூடினார்கள் என்று சுரேஷ் – பாலக்கிருஷ்ணன் கூறியிருந்தனர்.

  • Case Against MGR எம்ஜிஆர் மீது வழக்கு தொடுத்து ஜெயித்தவர் என் அப்பா… பிரபல நடிகர் ஓபன் டாக்!
  • Views: - 576

    0

    0