மீண்டும் அம்மனாக நயன்தாரா; என்னுடைய ஃபர்ஸ்ட் சாய்ஸ்; மனம் திறந்த ஆர் ஜே பாலாஜி,..
Author: Sudha13 July 2024, 11:37 am
ஆர்.ஜே.பாலாஜி, என்ஜே சரவணனுடன் இணைந்து நயன்தாராவை வைத்து 2020ம் ஆண்டு மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியான போதும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அம்மனாக நயன்தாரா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆர்ஜே பாலாஜியின் காமெடி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அதில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாகி உள்ளது.இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.