10 வருஷத்துக்கு பிறகு PLAY BOY நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா – நல்லா இருந்தா சரி…!
Author: Shree6 April 2023, 9:47 pm
மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், கான் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்னர் பிரபு தேவா, சிம்பு உள்ளோட்டரை காதலித்து ஏமாந்தார் நயன்.
தற்போது விக்கியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நயன்தாரா வடை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் . அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். இதுவரை மகன்களுக்கு , “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என நயன்தாராவின் பெயரை இனிஷியலாக வைத்துள்ளனர். காரணம், “N” ( Nayanthara ) என்பது உலகின் சிறந்த தாயை குறிக்கிறது என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், நயன்தாராவின் 75வது படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ராஜா ராணி படத்தில் நடித்து மெகா ஹிட் கொடுத்தனர். இந்த வெற்றி கம்போ மீண்டும் இணைந்திருப்பதால் நிச்சயம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கலாம். நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.