நயன்தாராவா இப்படி? டீ ஷர்ட்டை தூக்கி கட்டி பிரபல நடிகருடன்….முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!
Author: Rajesh18 January 2024, 12:35 pm
தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.
இந்நிலையில் பிரபல நடிகரான ஜீவா உடன் நயன்தாரா படு கிளாமராக உடையணிந்து ஏடாகூடமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ள வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார். ஆம், நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் அரைகுறை ஆடைகளை அணிந்துக்கொண்டு படு கவர்ச்சியாகவும், நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் ஆன பிறகு தான் மிகவும் டீசண்டாக கட்டுப்பாடுகளுடன் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் ஜீவாவுடன் “ஈ” படத்தில் நடித்தபோது நயன்தாரா டைட்டான டீ ஷர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு இடுப்பு தெரிய மிகவும் நெருக்கமாக முத்தக்காட்சியில் நடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: