உன்ன ஓரங்கட்டாம.. அந்த விஷயத்தை பண்ண மாட்டேன்.. சபதம் எடுத்த த்ரிஷா..!
Author: Vignesh9 May 2023, 3:22 pm
மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள்.

திரிஷாவுக்கு நயன்தாரா பெரும் போட்டியாக இருந்த சமயத்தில் நயன்தாராவை விட திரிஷாவின் அழகுக்கு பலகோடி ரசிகர்கள் இன்றும் உள்ளனர். இதனால் நயன்தாரா திரிஷாவுக்கு இடம் கொடுக்காமல் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து அவரது மார்க்கெட்டை இழக்க பிளான் போட்டு சாதித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இயக்குனர்கள் திரிஷாவையே மறந்து லிஸ்ட் அவுட் ஆக்கிவிட்டனர்.

பின்னர் திரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட் 96 திரைப்படம் தான். அந்த படத்தின் மூலம் மார்க்கெட் பிடித்தவர். தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ஓஹோன்னு புகழ் பெற்றார். இப்போது விஜய்யின் லியோ என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதன் மூலம் சதித்திட்டம் போட்டு சாதித்த நயந்தாரா தான் விதைத்த விதைகளையே அறுவடை செய்கிறார். ஆம், மீண்டும் தொடர் தோல்விகளை சந்தித்து சறுக்கிவிட்டார். இனிமே அவர் எழுந்திருப்பது கொஞ்சம் கடினம் என்கிறது சினிமா வட்டாராம்.
இதனால் நயன்தாரா கோவில், பரிகாரம் என செய்து வருகிறார்கள். மேலும், நயன்தாரா புதிதாக கமிட்டாகியுள்ள படங்களில் இருந்து கூட நீக்கப்பட்டு வருகிறார். மேலும், தற்போது நயன்தாரா நடிக்க இருந்த புதிய படமொன்று காரணமே இல்லாமல் கை நழுவி சென்றுள்ளது.
இந்நிலையில், நயன்தாராவை ஓரம் கட்டாமல் நடிகை த்ரிஷா திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவெடுத்து இருப்பதாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கொஞ்சம் கொஞ்சம் நயன்தாரா மார்க்கெட் குறைய அவரது இடத்தை வேறு சில ஆக்கிரமித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக த்ரிஷாவை சொல்லலாம். அவர் தான் தற்போதைய நடிகையாக மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறார். இப்படியே போனால் நயன்தாராவின் “லேடி சூப்பர் ஸ்டார்” பட்டத்தை கூட வேறு ஒரு நடிகைக்கு பிடிங்கி கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள் என்கிறார்கள் நயன் ஃபேன்ஸ். பாவம் தலைவி நிலைமை இப்படி ஆகிப்போச்சே..!